ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை: ரணில் கடும் கண்டனம்
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் ஹனியேவும் அவரது மெய்க்காப்பாளர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டதாக ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் கூறியதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் "தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்" கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, எனினும், இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Reviewed by Author
on
July 31, 2024
Rating:


No comments:
Post a Comment