உணவு மற்றும் பராமரிப்பு இன்றி வாடும் மிருகங்கள் இலங்கை மிருகக்காட்சி சாலையை மூடும் படி மக்கள் வேண்டுகோள்
தெகிவளை மிருகக்காட்சி (Dehiwala Zoo) சாலையை மூடுமாறும் விலங்குகளை முறையாக கவனிக்குமாறும் வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கையில் (Sri Lanka) மக்கள் அதிகமாக வந்து பார்வையிட்டு மகிழும் மிருகக்காட்சி சாலைகளில் தெகிவளை மிருகக்காட்சி சாலை முதன்மையாக காணப்படுகின்றது.
எனினும், பல ஆண்டுகளாக, இங்குள்ள விலங்குகள் போதுமான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் வாழ்வதாகவும் அவற்றின் ஆரோக்கியம் குன்றி காணப்படுவதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வருவதால் மிருகக்காட்சி சாலையை மூடுமாறு பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
Reviewed by Author
on
July 05, 2024
Rating:


No comments:
Post a Comment