பெண் பொலிஸ் அதிகாரி குளிப்பதை காணொளி எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்
நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் குளிப்பதை காணொளி எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதிமன்றம் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரியொருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்துள்ளார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த 4 ஆம் திகதி நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.
Reviewed by Author
on
July 06, 2024
Rating:


No comments:
Post a Comment