பெண் நகரசபை ஊழியர் மீது ரெலோ முக்கியஸ்தர் ரெலோ அலுவலகத்தில் வைத்து தாக்குதல்
மன்னார் நகரசபை எல்லக்குள் சோலவரி செலுத்தாத வீடுகளில் சோலவரி சேகரிக்க சென்ற பெண் மீது ரொலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியோக செயலாளர் இன்றைய தினம் மாலை தாக்குதல் மேற்கொண்ட நிலையில் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
மன்னார் நகரசபை எல்லை பகுதிக்குள் நீண்ட நாட்கள் சோல வரி செலுத்தாத வீடுகளுக்கு சென்று இரு பெண் உத்தியோகஸ்தர்கள் இன்றையதினம் மாலை உரிய ஆவணங்களுடன் வரி சேகரிக்க சென்றுள்ளனர்
இந்த நிலையில் மன்னாரின் பிரதான ரெலோ அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரும் வரி செலுத்தாமையினால் குறித்த வீட்டினுள் சென்று ஊழியர்கள் வரி தொடர்பில் தெரிவித்தனர் இந்த நிலையில் குறித்த அலுவலகத்தில் இருந்த நபர் குறித்த பெண்களுடன் முரண்பட்டதுடன் வெளியே கலைத்துள்ளார்
அதே நேரம் சம்மந்தப்பட்ட நபரின் பிரிதொரு கடை தொடர்பில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈட்பட்டதுடன் ஒரு பெண்ணை தாக்கி வெளியே கலைத்துள்ளார்
இந்த நிலையில் சம்மந்தபட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட நபரும் தன்னை நியாயப்படுத்தும் முகமாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் இருந்த ஏனையவர்களுக்குள்ளும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment