நகரசபை பெண் ஊழியர் மீது ரெலோ மாவட்ட இணைப்பாளர் தாக்குதல் நாளை நகரசபை ஊழியர்கள் போராட்டம்
மன்னார் நகரசபை எல்லைக்குள் சோலவரி செலுத்தாத வீடுகளில் சோலவரி சேகரிக்க சென்ற நகரசபை பெண் ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியோக செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி நாளையதினம் காலை மன்னார் நகரசபை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்
நேற்றையதினம் மன்னார் செபஸ்ரியார் கோவில் பகுதியில் சோலவரி சேகரிக்க சென்ற பெண் மீது ரெலோ அலுவலகத்தில் ரொலோ கட்சியின் மாவட்ட இணைப்பாளரும் செல்வம் அடைக்கலநாதனின் பிரத்தியோக செயலாளருமான நபர் தாக்குதல் மேற்கொண்டதுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டிருந்தார்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் அரச சேவையை மேற்கொள்ள விடாது இடையூறு விளைவித்தமை தொடர்பாகவும் அதே நேரம் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலும் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்
இருப்பினும் இதுவரை சம்மந்தப்பட்ட நபர்மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குறித்த விடயமம் மழுங்கடிக்கப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு நீதி கோரி நகரசபை ஊழியர்களால் நாளையதினம் போராட்டம் இடம்பெறவுள்ளது
குறித்த தாக்குதல் மேற்கொண்ட நபர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது மன்னார் நகரசபை உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக களமிறங்க இருந்தமை நிலையில் தேர்தல் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment