“ஏர் நிலம்” தொண்டமைப்பு செயற்படுத்தும் அமுதம் கல்வித் திட்டம் 2024ஆம் ஆண்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
ஏர் நிலம்” தொண்டமைப்பானது
கடந்த நான்கு(04) வருடங்களாக “அமுதம் கல்வித் திட்டம்” என்ற செயற் திட்டத்தை உருவாக்கி நடாத்தி வருகிறது
இவ். அமைப்பானது பொருளாதார நிலையில் பின் தங்கி கல்வி கற்க சிரமப்படும் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு மாதாந்த கல்வித் தொகையை புலம்பெயர்ந்த உறவுகளின் நிதியுதவியில் வழங்கி அவர்களது கற்றல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளது.
அந்த வகையில் 01.09.2024 அன்று
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டி இந்துபுரம்
“பவுல் முன்பள்ளியில்”வருடாந்த ஒன்று கூடல் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு வணக்கத்திற்குரிய மத குருமாரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வாக மாணவர்களால்
மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்ட விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி நிகழ்வை இனிதே தொடங்கி வைத்தனர்.
வரவேற்புரையினை
ஏர் நிலத்தின் கிளிநொச்சி மாவட்டச் செயலாற்றுனர்
திருமதி வதனா ரதீஸ்வரன்
அவர்கள் சிறப்பாக நிகழ்த்த அதனைத் தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரை இடம்பெற்றது.
தலைமை உரையினை முல்லை.மாவட்ட செயலாற்றுனர் கவிஞர் திரு. முறிகண்டி லக்சிதரன் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஏர் நிலத்தின் களத்திற்கும் புலத்திற்குமான இணைப்பாளர் கவிஞர். மன்னார் பெனில் அவர்கள் இச் செயற்திட்ட விளக்கவுரையினை ஆற்றினார்.
அவர் தனது உரையிலே
அமுதம் கல்வித்திட்ட மாணவர்களின் கற்றல் செயற்படானது முன்னேற்றகரமாக அமைவதோடு புலம்பெயர் தேசத்திலிருந்து இவர்களுக்கு நிதி அனுசரணை வழங்குகின்ற உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை கூறி அமுதம் கலித்திட்டத்தின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பாகவும் கூறிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து கவிச்செம்மல் வன்னியூர் வரன் அவர்கள் தனது உரையிலே கல்வியின் மேன்மை பற்றி எடுத்துக் கூறி மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் தேசமான்ய கம்பீரக்குரலோன்
திரு. சி.நாகேந்திரராசா அவர்கள் தனது ஆளுமை மிக்க பேச்சாற்றலால் ஏர் நில செயற்பாடுகள் பற்றியும் அமுதம் கல்வித் திட்டம் பற்றியும் பெற்றோர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டும் என்றும் தனது சிறப்புரையினை நிகழ்த்திச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து ஏர் நிலம் அமைப்பின் ஆலோசகரும் சமாதான நீதவானுமாகிய ஓய்வுநிலை அதிபர்
திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் அவர்கள் கடந்த காலங்களில் கல்வி கற்பதற்கு தாம் பட்ட கஷ்டங்களையும் இப்போது இருக்கின்ற மாணவர்களின் மன நிலையையும் தொட்டு தனது உரையினை நிகழ்த்தி சென்றார்.
தொடர்ந்து தொலைபேசி வாயிலாக சுவிட்சர்லாந்திலிருந்து
ஏர் நிலத்தின் நிறுவுனர்
திரு.து.திலக்(கிரி) அவர்கள்
ஏர் நில செயலாற்றுனர்கள் பற்றியும், அமுதம் கல்வித் திட்டம் பற்றியும் தனது ஆழமான கருத்துக்களை பகிர்ந்து சென்றார்.
பின்னர் 36 மாணவர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்து நிதி வழங்குகின்றவர்களின் விவரங்களையும் அதன் நிதியினூடாக பயன்பெறும் மாணவர்களின் விபரங்களையும் அரங்கிலே வெளிப்படுத்தி புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற நிதியாளர்களுக்கு மேலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் ஏர் நில செயலாற்றுனர் திரு.யே.லக்சிதரன் அவர்கள் பகிர்ந்து கொண்டதோடு மாணவர்களின் கற்றலுக்கான நிதி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இறுதியாக
மதிய நேரச் சிறப்பு உணவோடு இந்நிகழ்வானது இனிதே நிறைவானது.

No comments:
Post a Comment