“இது உங்களுக்காக”: வெளியானது நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் களம் விறுவிறுப்பான நிலையில், ஒவ்வொரு வேட்பாளர்களின் தனித்துவமான தே்ரதல் விஞ்ஞாபனங்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்றுமுன் வெளியானது.
நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் “இது உங்களுக்காக” என்ற தொனிப்பொருளின் கீழ் உங்கள் நலனில் அக்கறைக்கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிய தசாப்தம் என்ற தொலைநோக்கு பார்வையை கொண்டு 12 பக்கங்களை கொண்டு வெளியாகியுள்ளது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வயிற்றுப்பசிக்கும் வாழ்க்கைப் பசிக்கும் நிவாரணம், இலங்கையை ஒரு புதிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, அரசாங்கத்தின் முன்னுரிமை, புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்தல், முதலீடுகள், சுதந்திரம் ஆகிய பிரதான கோட்பாடுகளைக் கொண்டு நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது.
Reviewed by Author
on
September 02, 2024
Rating:


No comments:
Post a Comment