புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை, தேசிய ரீதியில் மற்றுமோர் மாபெரும் சாதனையை நிலை நாட்டியுள்ளது.....
தேசிய ரீதியில் சென்ற வருடம் (2023) செப்டம்பர் மாதம் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டி முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இப்போட்டியில் கலந்து கொண்ட எமது பாடசாலை மாணவன் செல்வன் Q.R.Larishan அகில இலங்கை மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியானது முதலில் தமிழ் மொழி மட்டும் பேசுகின்ற 1000 மாணவர்களுக்கிடையில் இடம்பெற்று அதில் 1ம் இடத்தை இவர் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மும்மொழி பேசுகின்ற (தமிழ்/ சிங்களம்/ஆங்கிலம்) 1000 மாணவர்களுக்கிடையில் இப்போட்டி இடம் பெற்று, அம் மாணவர்களுள் முதல் 10 இடங்களுக்குள், செல்வன் Q.R. Larishan 1ம் இடத்தை பெற்று, அகில இலங்கை ரீதியில் மாபெரும் சாதனையைப் நிலைநாட்டி பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார். இவருக்குரிய அகில இலங்கை மற்றும் தேசிய ரீதியிலான 2 சான்றிதழ்களும், பதக்கமும், வழங்கி வைக்க பட்டது இம்மாணவனை பாடசாலை சமூகமாக வாழ்த்துகின்றனர் இவருக்கு உதவி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பெற்றோருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இறைவன் இம்மாணவனையும், ஆசிரியர்கள், பெற்றோரையும் தொடர்ந்தும் ஆசிர்வதிக்க இறைவனின் வேண்டுகின்றோம்.
இம் மாணவனின் தம்பி செல்வன் Q.R. கௌசல்யன், சர்வதேச ரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment