மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மது விற்பனை நிலையத்தை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
மன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மது விற்பனை நிலைய அனுமதி பத்திரத்தை ரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
குறித்த மதுபானசாலை பாடசாலை , ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள மையானது குறித்த பகுதி மக்களிடையே பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மது விற்பனை நிலையத்தை மூடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
Reviewed by Author
on
September 27, 2024
Rating:
No comments:
Post a Comment