யாழ் சிறைச்சாலையின் கைதி ஒருவர் பலி: தீவிர விசாரணையில் பொலிஸார்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தள்ளார்.
இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த 42 வயதான கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரியபண்டார மேலதிக விசாரணைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சாம்லி பலிஹேன, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் பரிசோதகர் இந்திக்க அபேகுணசேகர ஆகியோரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ் சிறைச்சாலையின் கைதி ஒருவர் பலி: தீவிர விசாரணையில் பொலிஸார்
Reviewed by Author
on
September 29, 2024
Rating:
No comments:
Post a Comment