அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள அரச மருந்து கூட்டுத்தாபனம்

இலங்கை அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பம் ஆகியுள்ளது


மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மநாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுதாபனத்தின் கிளையை மன்னாரில் ஆரம்பிப்பதற்கான காணி இன்றைய தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது 


மன்னார் நகரப்பகுதியில் பொது மக்கள் மிக குறைந்த விலையில் மருந்துகளை பெற்று கொள்ளும் வகையில் மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த கிளை ஆரம்பிக்கப்படவுள்ளது


குறித்த காணியை அளவிட்டு அடையாளப்படுத்தும் முகமாக  ஒசுசல அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் மன்னார் பிரதேச செயலாளர் பிரதீப் மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் அசாத் மன்னார் நகரசபை செயலாளர் பிரிட்டோ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு காணி அடையாளப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்









மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள அரச மருந்து கூட்டுத்தாபனம் Reviewed by Author on September 06, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.