யாழ்ப்பாணத்தில் சஜித்தின் மனைவிக்கு இராணுவ மரியாதை
ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குகளை வசப்படுத்துவதில் தென்னிலங்கை பிரதான வேட்பாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து சிங்கள வேட்பாளர்கள் தீவிர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிரச்சாரத்தின் போது பேசப்படும் விடயங்களும், செயற்பாடுகளும் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்துள்ளது.
அந்த வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி, ஜலனி பிரேமாச யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தில் அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டமை சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.
தற்போதைய இராணுவ மரியாதை செலுத்தும் முறைக்கமைய, துப்பாக்கி செங்குத்தாக உடலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு பொதுவாக தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செலுத்தப்படுகின்றது.
எனினும், இந்த இரு பிரிவிலும் உள்ளடங்காத ஜலனி பிரேமாசவிற்கு இராணுவ மரியாதை வழங்கியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜலனி பிரேமாசவுடன் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸூக்காகவே இந்த இராணுவ மரியாதை நிகழ்த்தப்பட்டதாகவும் வேறு எந்த நபருக்கும் அல்ல என விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த குழுவிற்கு ஜலனி பிரேமதாச தலைமை தாங்கினார் என்பதும் அவருக்குப் பின்னால் ஜி.எல். பீரிஸ் நடந்து செல்வதைக் காண முடிந்துள்ளது.
மேலும், பின்னர் பலாலி முகாமில் பிரதம அதிதியாக ஜலனி பிரேமதாச கலந்து கொண்டதுடன், சால்வை போர்த்தப்பட்டு வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment