பஸ் கட்டணம்: குறைந்தபட்சமாக 25 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும்
எரிபொருள் விலைக் குறைப்புடன் ஒப்பிடுகையில் பஸ் கட்டண குறைப்பு போதாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாவாக இருக்க வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணம் 01 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
புதிய கட்டண திருத்தத்தின்படி 27, 56, 66, 77 ரூபா போன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும், அந்த பலன் பஸ் உரிமையாளருக்கோ, பயணிகளுக்கோ கிடைக்காது என்றும் அவர் கூறினார்.
இதன் காரணமாக நடத்துனர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி குறைந்த பட்ச கட்டணம் 25 ரூபாவாகவும், ஏனைய கட்டணங்களை 55, 65, 75 ரூபாவாக மாற்றியமைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தினால் பயணிகளுக்கு மேலும் நிவாரணம் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment