குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நேரம்“: ஜனாதிபதிக்கு நாமல் சவால்
ராஜபக்ச ஆட்சியின் பொது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
உகாண்டா மற்றும் சீஷெல்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் பொது நிதிகள் கொள்ளையிடப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி முன்னர் தெரிவித்த கூற்றுக்களின் காணொளி காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதனை நிருபிக்குமாறு சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவென்றும் நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் பதுக்கி வைத்துள்ளோம் என்று ஜனாதிபதியும் அவரது குழுவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுவென்றும் நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.
Reviewed by Author
on
October 02, 2024
Rating:


No comments:
Post a Comment