அண்மைய செய்திகள்

recent
-

இனிவரும் காலங்களில் யாழிலிருந்து கொழும்பிற்கு குளிரூட்டப்பட்ட ரயில் சேவை

 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.


இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில், தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.




ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும்.




பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது.




யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது.


எனினும் கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.



    

இனிவரும் காலங்களில் யாழிலிருந்து கொழும்பிற்கு குளிரூட்டப்பட்ட ரயில் சேவை Reviewed by Author on December 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.