அண்மைய செய்திகள்

recent
-

படகு விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி

 செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்துள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய பிரமோத் என்ற மாணவராவார்.

இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




படகு விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி Reviewed by Author on December 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.