விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இலங்கையர் அவுஸ்ரேலியாவில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அவுஸ்திரேலியா நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறுநாள் 19ஆம் திகதி அந்நபருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
அதனையடுத்து, அவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதோடு, வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியாவில் தங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிணை நிபந்தனைகளின் அடிப்படையில், வாரத்துக்கு மூன்று முறை அவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா பதிவுகளை இம்மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவுஸ்திரேலியா பொலிஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Reviewed by Author
on
January 10, 2025
Rating:
.jpg)

No comments:
Post a Comment