மன்னார் தோட்டக்காட்டு பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக் காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் தோட்டக்காட்டு பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
January 20, 2025
Rating:

No comments:
Post a Comment