இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே இன்றும் (10) நாளையும் (11) ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மின் விநியோக துண்டிப்பு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு
Reviewed by Author
on
February 10, 2025
Rating:

No comments:
Post a Comment