மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு
சீனாவின் 'சகோதர பாசம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
கட்டுக்காரன் குடியிருப்பு மற்றும் துள்ளுக்குடியிறுப்பு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன் வெய் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின்போது 350 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர்.எம்.பிரதீப்மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
February 10, 2025
Rating:



.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment