அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கனியமணல் அகழ்வுக்கு எதிராக போராடும் சட்டத்தரணி,அருட்தந்தையர் உள்ளடங்களாக 10 நபர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

 மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொது மக்களுக்கு இடையூற்,நஸ்ரம்,தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கியுள்ளது


மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்த நிலையில் இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்பினால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பியனுப்பப்பட்டனர்


இவ்வாறான நிலையில் நாளைய தினம் மீண்டும் குறித்த அரச திணைக்களங்கள் மற்றும் ஒரியன் மினரல் நிறுவனம் ஆய்வுக்காக மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளி பகுதிக்கு வருகை தர உள்ள நிலையில் பொது மக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில் போராட்டகாரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் பொலிஸார் தடையுத்தரவினை பெற்றுள்ளனர்


குறிப்பாக சட்டத்தரணி செல்வராஜ் டினேஸன், பிரகாஷ் மகிலா,அருட்தந்தை மார்கஸ்,கிறிஸ்து நேசரத்னம்,சந்திரதாஸ் ஐங்கரன்,நேசன் லுஸ்தீன்,அமிர்தநாதன் தட்குரூஸ்,இம்மானுவேல் கலிஸ்ரன்,செபமாலை பிரான்சிஸ்,அன்ரூ மெக்சின் எனும் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது


குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு எந்ற்படதாக வகையில் போராட்டம் மேற்கொள்ளலாம் என எந்த பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்காலுக்கு சேதம் ஏற்படுத்த கூடாது எனவும் மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பிலான பிரச்சார நடவடிக்கையின் போது மன்னார் மக்களுக்கு விருப்பம் இல்லாத கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாக தெரிவித்த நிலையில் அவர் ஜனாதிபதியாக ஒரு வருட காலப்பகுதிக்குள் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான கூர்பு அறிக்கையை தயார் செய்வதற்கான நாளையுடன் இரண்டாவது முறை அரச திணைக்களங்கள் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது







மன்னாரில் கனியமணல் அகழ்வுக்கு எதிராக போராடும் சட்டத்தரணி,அருட்தந்தையர் உள்ளடங்களாக 10 நபர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு Reviewed by Author on February 17, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.