அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகம் தெரிவு!

 

வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் நிர்வாகத் தெரிவானது இன்று (18.02.2025) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில், இலங்கை சாரணர் சங்கத்தின் உதவி பிரதம ஆணையாளர் கா.அமிதன் மற்றும் வவுனியா மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.  

வவுனியா மாவட்ட சாரண சங்கத்தின் தவிசாளராக ஆசிரியர் வள முகாமையாளர் (புளியங்குளம்) சு.ஜெயச்சந்திரன் அவர்களும், செயலாளராக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் முகாமையாளர் பூ.சர்மிலன் அவர்களும், பொருளாளராக வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் அவர்களும், உப தவிசாளராக வவுனியா தெற்கு வலயக் கல்வி பணிமனையின் நிர்வாக உதவியாளர் ப.பிறேமதிலக அவர்களும், பதக்க செயலாளராக வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் அதிபர் க.ஸ்ரீகந்தவேள் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், நிர்வாக உறுப்பினர்களாக  வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.வீரசிங்கம், உதவி மாவட்ட ஆணையாளர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிமனையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.சபேசன், வவுனியா பாரசக்தி வித்தியாலயத்தின் அதிபர் வ.ஜதீஸ்கரன், வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தின் ஆசிரியர் இ.சந்திரமோகன், வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் ஆசிரியர் சு.காண்டீபன் அவர்களும், சாரண தலைவர்களான வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தின் ஆசிரியர் செ.மயூரி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர் பா.மேரிஜெயறூபினி அவர்களும், திரி சாரண தலைவரும், தனியார் நிறுவன உத்தியோகத்தருமாகிய  பி.கெர்சோன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.






இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகம் தெரிவு! Reviewed by Author on February 19, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.