அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இராணுவத்தின் 542 ஆவது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்வு

 இராணுவத்தின்  542 ஆவது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி  இன்றைய தினம் சனிக்கிழமை (080  மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


 மன்னார் 542 காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலய பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன நிகழ்வு போட்டி  இன்றைய தினம் (08.03) சனிக்கிழமை 1.45 மணி அளவில்  மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


இராணுவத்தின்   542 வது பிரிவு அதிகாரி  மேஜர் விக்டர் பெர்னாண்டோ மற்றும்   பிரிகேடியர்   சந்திக்க அசுருசிங்க,அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலாச்சார நடனப் போட்டியில் 12 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.


குறித்த நிகழ்வில் மன்- புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவர்கள் முதலாம் இடத்தையும், மன் டிலாசால் கல்லூரி நானாட்டான் மாணவிகள் இரண்டாம் இடத்தையும் திருக்கேதீஸ்வரம் மன்-கௌரியம்பாள் தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.


முதல் மூன்று இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவிகள் விருந்தினர்களால்  பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


 இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் இரண்டு சிங்கள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகளும் பங்கேற்று கலாச்சார நடனத்தினை வழங்கியிருந்தனர்.


குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ஐ. பி ஜயசிங்க.  நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் வை.சந்திரபால  மேஜர் சிறீநாத் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.










மன்னாரில் இராணுவத்தின் 542 ஆவது காலாட்படை பிரிவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்வு Reviewed by Vijithan on March 09, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.