அண்மைய செய்திகள்

recent
-

O/L தமிழ் பரீட்சை எழுதச் சென்ற 88 வயது பாட்டி

 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளான இன்று (26) காலை தமிழ் மொழி பரீட்சையை எழுத தயாராகிய மிஸலின் நோனா பற்றியதே இந்த விடயம்.




இன்று (26) காலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராவார். 40 வருடங்களாக பல பாடசாலைகளில் கற்பித்துள்ளார்.


களுத்துறை பகுதியைச் சேர்ந்த இந்த ஓய்வுபெற்ற ஆசிரியை தனது 20 ஆவது வயதில் ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுள்ளார். 1957 ஆம் ஆண்டு கண்டியின் மடுகல்லையில் தனது ஆசிரிய பயணத்தை ஆரம்பித்த அவர் தற்போது ஓய்வு பெற்று 30 வருடங்களாகிறது. வீட்டு வேலைகளை பார்த்தவாறு நன்றாக வாழ்ந்து வருகிறார்.



தையல் மற்றும் பின்னல் கலைகளில் திறமையான அவர், பின்னல் பொருட்களை உருவாக்குவதில் மிக திறமையானவராக காணப்படுகின்றார்.


தமிழ் மொழியை கற்பதற்காக ஆசிரியர் ஒருவரின் உதவி நாடிச் செல்லாத அவர், புத்தகங்களை வாங்கி வந்து தமிழ் மொழியை கற்றுள்ளார். இதற்கு அவருடைய மகள் பெரிதும் உதவியுள்ளார்.


இன்று நடைபெற்றம் சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் மொழி தமிழ் மொழிப் பாடத்தில் உயர் சித்தியைப் பெறுவதே அவருடைய எதிர்பார்ப்பாகும். மிஸலின் நோனாவின் ஒரேயொரு குறிக்கோள், தான் இறக்கும் வரை கற்றுக்கொள்வதுதான் என்று அவர் கூறுகிறார்.



அதற்கமைய, இலங்கையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதிய மிக வயதான பெண்மணி என்ற சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள மிஸலின் நோனாவின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துகள்.




O/L தமிழ் பரீட்சை எழுதச் சென்ற 88 வயது பாட்டி Reviewed by Vijithan on March 26, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.