மன்னாரில் பெண் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
'பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மை யை மேம்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜப்பானின் தூதரகத்தின் துணைத் தலைவர் பிரதி அமைச்சர் கமோஷிடா (kamoshida minister deputy head of mission embassy of japan) மற்றுட் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் உள்ளடங்களாக பிரதேச செயலாளர்கள்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் பெண் சுய தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சுய தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்ட தோடு,மன்னார் மாவட்டத்தில் உள்ள சுயதொழில் உற்பத்தி பெண் முயற்சி யாளர்களினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவு பொருட்கள்,கலை பொருட்கள்,ஆடை வகைகள் கண்காட்சிகள் இடம்பெற்றதுடன் விற்பனை சந்தையும் இடம் பெற்றது.
அதே நேரம் சுய தொழில் முயற்சி மற்றும் வியாபார முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான தையல் இயந்திரம்.பொர்கோன் மெஷின்,குளிர்சாதன பொட்டி உள்ளடங்களாக பல்வேறு தொழில் உபகரணங்கள் வைபவரீதியாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment