அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற 'கலாசார சங்கமம் நிகழ்வு-2025

 'ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் களைஞர்களை வெளிக்கொணரும் எங்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்  ஏற்பாடு செய்த  'கலாசார சங்கமம் நிகழ்வு-2025' இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.


மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மன்னார் மாவட்ட சிரேஸ்ட திட்ட அலுவலர் ஜெபநாதன் டலிமா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


அருகி வரும் கலைகள் மற்றும், ஓரங்கட்டப்பட்டு வருகின்ற சிறுவர்கள் மற்றும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் மரபு ரீதியாக வந்த பாரம்பரிய கலைகளான நாட்டு கூத்து,நாட்டார் பாடல்கள்,வில்லுப்பாட்டு,கும்மி நடனம் போன்ற  பாரம்பரிய கலை நிகழ்வுகள் சிறுவர்களுக்கு பயிற்று விக்கப்பட்டதோடு சிறுவர்களின் ஆற்றல்களையும் வெளிக்கொண்டு வந்தனர்.


மேலும் எதிர்வரும் காலங்களில் இளைய தலைமுறையினர் பங்கு கொள்ளும் நோக்குடன் இச் செயல்பாடுகளை முன்னெடுக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் தேசிய கலைஞர் எஸ்.ஏ.உதயன் கலந்துகொண்டதோடு,சிறுவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
















மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற 'கலாசார சங்கமம் நிகழ்வு-2025 Reviewed by Vijithan on March 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.