மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்-மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சாதனையாளர்கள் கௌரவிப்பு.
'நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (12) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறிரங்க நாயகி கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக நானாட்டான் பிரதேசச் செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு கலந்து கொண்டதோடு,மாவட்டச் செயலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் விருந்தினர் களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,மன்னார் தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த மாணவி யேசுதாசன் யதுசிகா ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டமையினால் அவருக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'மன் ஆற்றல் வீராங்களை' என்னும் விருது மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறி ரங்கநாயகி கேதீஸ்வரன் அவர்களின் சேவையை பாராட்டி விசேடமாக கௌரவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
March 12, 2025
Rating:


No comments:
Post a Comment