தேர்தல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுடன் தொடர்புடைய வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை குறித்த மேலும் 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (06) மாத்திரம் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வாய்மொழி மிரட்டல் சம்பவம் தொடர்பாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பெறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக மத்துகம, பதுரலிய, அளுத்கம, களுத்துறை தெற்கு, முல்லேரியா, களனி மற்றும் ராகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் அணிவகுப்புகளை நடத்தல், நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கட்சியை விளம்பரப்படுத்தல், அன்னதானம் வழங்கல் மற்றும் சட்டவிரோதமாக சுவரொட்டி கட்அவுட்களை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தேர்தல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
Reviewed by Vijithan
on
April 07, 2025
Rating:
Reviewed by Vijithan
on
April 07, 2025
Rating:


No comments:
Post a Comment