பொலிஸ் பாதுகாப்புடன் பயணித்த ஆசிரியை குறித்து விசாரணை
கடந்த சில நாட்களாக மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியை ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த ஆசிரியை தனது தனிப்பட்ட பிம்பத்தை உருவாக்க இந்த பொலிஸ் வளங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்புடன் பயணித்த ஆசிரியை குறித்து விசாரணை
Reviewed by Vijithan
on
April 19, 2025
Rating:

No comments:
Post a Comment