பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு மறுப்பு; உதயகம்மன்பிலவுக்கு அனுமதி
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனவும் அதற்கு சிஐடியினர் அனுமதிவழங்கவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இது தொடர்பில் சிஐடியினரை தொடர்புகொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனினும் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வது சட்டவிரோதமானது என்பதால் அதற்கு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவெளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது . அந்த சந்திப்பு சிஐடி அலுவலகத்தில் சிஐடியினரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
April 15, 2025
Rating:


No comments:
Post a Comment