யாழில் இளைஞனும் யுவதியும் கைது ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய போது 550 கிராம் கஞ்சா, 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு லைற்றர் மற்றும் கண்ணாடித் துண்டுடன் இளைஞன் மற்றும் யுவதியும், வெகனார் வாகனமும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் இளவாலையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணையின் பின்னர் நாளைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
June 29, 2025
Rating:


No comments:
Post a Comment