யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை
யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.
இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், "வட மாகாணத்தில் எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமையான முறையில் செயல்பட்டு எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, போதிய அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்க்களப் போக்கு எரிபொருள் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை
 Reviewed by Vijithan
        on 
        
June 17, 2025
 
        Rating:
 
        Reviewed by Vijithan
        on 
        
June 17, 2025
 
        Rating: 
       Reviewed by Vijithan
        on 
        
June 17, 2025
 
        Rating:
 
        Reviewed by Vijithan
        on 
        
June 17, 2025
 
        Rating: 


 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment