சட்டவிரோதமாக தமிழகத்திற்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் செல்ல முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கடனட்டை மற்றும் 46,000 ரூபாய் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மூவரையும் கைதுசெய்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து கரையோர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் தமிழகத்திற்குள் சென்று அங்கிருந்து
ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவுதத் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Reviewed by Vijithan
on
June 28, 2025
Rating:


No comments:
Post a Comment