திசைகாட்டி எம்.பியின் நித்திரை கலக்கத்தால் கோர விபத்து
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார செலுத்திய கார் ஹேனகம நகரில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த அவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நேற்று (26) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, ஹெம்மாதகம நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்சார விநியோக நிலையத்தின் அதிகாரிகள் சென்று, வீதியில் விழுந்திருந்த மின்கம்பிகளை பாதுகாப்பாக அகற்றி, மின்சாரத்தை மீண்டும் வழங்கியுள்ளனர்.
விபத்தின் போது எயார் பேக் திறந்ததால் நந்த பண்டாரவின் உயிர் காப்பாற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார, விபத்து தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:
"நான்கு நாட்களாக ஒரேயடியாக கட்சி மற்றும் மக்களின் பல்வேறு பணிகளுக்காக உழைக்க வேண்டியிருந்தது. எனது கட்சி அலுவலகம் அரநாயக்கவில் உள்ளது. பொதுவாக, அங்கு பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது நள்ளிரவாகிவிடும்.
சாரதி அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை அழைத்து வருவதில்லை. 8 கிலோமீட்டர் தூரத்தை ஒவ்வொரு நாளும் நானே தனியாக வாகனத்தை செலுத்தி வீட்டிற்கு செல்வேன்.
இந்த விபத்து நித்திரை வந்ததால் நடந்தது. மோதியபோதுதான் விபத்து நடந்ததை உணர்ந்தேன். ஆனால், அப்போது நான் மிகவும் கடினமான பாதையில் இருந்து வந்திருந்தேன். வீடு தெரியும் நிலையில் தான் இந்த விபத்து நடந்தது.
பொலிஸார் வந்தனர், மின்சார சபையின் பொறுப்பு அதிகாரிகளும் வந்தனர். சேதமடைந்த மின்கம்பத்திற்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டிற்காக மதிப்பீடு செய்யுமாறு கூறினர். அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாததால், வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது" என்றார்.
திசைகாட்டி எம்.பியின் நித்திரை கலக்கத்தால் கோர விபத்து
Reviewed by Vijithan
on
June 27, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 27, 2025
Rating:


No comments:
Post a Comment