இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகரசபை முதல்வர் க.செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெ.சுரோஸ்குமார், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பிரகலாதன், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:
Post a Comment