நானாட்டான் பிரதேச செயலகத்தின் 2025பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
நானாட்டான் பிரதேச செயலகத்தின் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் அவர்களின் பங்குபெற்றுதலுடன் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்களது தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான , கௌரவ செல்லத்தம்பி திலகநாதன் அவர்கள் , கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் ,கௌரவ துரைராசா ரவிகரன் அவர்கள், கௌரவ முத்து முகமது ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நானாட்டான் பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், அரச திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் பங்குபற்றினர்.
இக்கூட்டத்தில் வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம், குடிநீர், வனவள மற்றும் வனஜுவராசி திணைக்கள காணிகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

No comments:
Post a Comment