நானாட்டான் பிரதேச சபையின்உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு..
நானாட்டான் பிரதேச சபையின் மூன்றாவது சபைக்கான கௌரவ தவிசாளர், கௌரவ உப தவிசாளர், இன்னும் கௌரவ உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வானது, நானாட்டான் பிரதேச சபையினால் சிறப்பாகவும், அதே வேளை எளிமையாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு ,இன்று 09.07.2025 காலை 9 15 மணியளவில் ஆரம்பம் ஆகியது .
இந்த நிகழ்வில் நான்கு மத தலைவர்கள், மற்றும் கட்சிகளின் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் நானாட்டான் பிரதேச சபையின் ,மூன்று உப அலுவலகங்களை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சிற்றூலியர்கள் அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர்.
இதன்போது ஆரம்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் சபை அலுவலர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டு, மண்டபத்தினுள் அழைத்து வரப்பட்டு ,மங்கள விளக்கேற்றல் நிகழ்வை தொடர்ந்து, நான்கு மத தலைவர்களினாலும் ஆசிரியரை இடம்பெற்றது.
அதே வேளை பிரதேச சபை செயலாளர் அவர்களினால் சகல உறுப்பினர்களையும் வரவேற்று வரவேற்பு உரையும், தலைமை உரையும் இடம்பெற்றது. தொடர்ந்து உறுப்பினர்கள் சார்பாக கௌரவ உறுப்பினர். ருக்ஸன் அவர்கள் உரையாற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து தவிசாளரின் கன்னி உரை இடம்பெற்றது.
தொடர்ந்து நன்றியுரை இடம் பெற்றது .இந்த நிகழ்வுகளில் வரவேற்பு நடனத்தினை புனித. டி லா சால் கல்லூரி மாணவிகள் வழங்கியிருந்தார்கள் .
மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் இந்த நிகழ்வு 10:30 மணி அளவில் இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment