செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் படுகொலை இடம்பெற்ற இடத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் 2006 ம் ஆண்டு வான்படையின் குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் 19 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 14.08.2025 அன்று வள்ளிபுனம் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்
முல்லைஈசன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை உயிர்நீதத இரண்டு பிள்ளைகளின் ,, தாயார் ஏற்றி வைததார் மாணவர்களின் திருவுருவப்படத்திற்
கான ஈகைச்சுடரேற்றி,, மலர்மாலையினை உயிர்நீதத மாணவிகளின்
பெற்றோர் உறவினர்கள் அணிவித்தனர்
நினைவுரைகளை தாய்த்தமிழ்பேரவையின் ஸ்தாபகரும் முன்னாள்போராளியுமான ச.ரூபன்,, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பொ.கஜேந்திரகுமார் ,, து.ரவிகரன் மற்றும் கௌரவ பிரதேசசபை தவிசாளர் கரிகாலன் பிரதேசசபைஉறுப்பினர்கள் ,, பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

No comments:
Post a Comment