அண்மைய செய்திகள்

recent
-

செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது

 அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 ஆவது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை அழுதழுது கூறினார்கள். 


1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35 ஆவது வருட நினைவேந்தல் திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் நேற்று (06) மாலை இடம்பெற்றபோது அங்கு இவ்வாறு குறிப்பிட்டனர். 


இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 


செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது அதுவும் தோண்டப்படவேண்டும். அட்டாளச்சேனை கிழக்கு மாகாணம் பிரதேச கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஆறாம் திகதி நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களினுடைய இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்கேணியாகும் தமிழர் பண்பாடு மிகுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும். 


சைவ ஆலயங்கள் இந்த கிராமத்தின் தன்மைக்கு ஆதாரமாய் இருக்கும் சான்றுகளாகும் இந்த கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதேபோன்று அம்பாறையில் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்ப்பட்டது. 


இராணுவத்தினரின் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் உதவியுடன் திராய்கேணி கிராமத்தில் நுழைந்த முஸ்லீம் ஊர்காவல்ப்படையினர். முஸ்லிம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்கள் போன்ற இனவழிப்பாளர்கள் அங்குள்ள மக்களை கோயில்களில் ஒன்று சேரும்படி அழைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே அங்கு மக்கள் கூட அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் என தமிழர்களை வெட்டியும் சுட்டும் வெறித்தனமாகக் காவு கொண்டனர். 


முதியவர்களை தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவங்களும் இன்றும் அங்கு நேரடியாக பார்த்த உறவுகளினுடைய கண்களில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சுமார் தீக்கிரையாக்கப்பட்டதுடன் அன்றைய நாள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த வெறியாட்டமானது பிற்பகல் வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள செயலகத்திற்குட்பட்ட திராய்க்கேணி எனும் 350 இற்கும் மேலான வீடுகள் அழிக்கப்பட்டன. 


35 இந்த திட்டமிடப்பட்ட கொலையிலே சுமார் 40 பெண்கள் விதவை ஆக்கப்பட்டிருந்தார்கள் பலர் அங்கவீனப்பட்டிருந்தார்கள் இவ்வாறாக ஆண்டுகள் கடந்தும் இன்றும் அந்த உயிரிழந்த ஆன்மாக்களுக்கான பிரார்த்தனைகளையும் அஞ்சலிகளையும் செய்து நீதியினை எதிர்பார்த்து வலியோடு திராய்க்கேணி கிராம மக்கள் காத்திருக்கின்றார்கள் என்றனர்




செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது Reviewed by Vijithan on August 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.