ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யோசனை! 03 நாடுகள் இலங்கையை ஆதரிக்குமா?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதிபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக ஒரு யோசனையை கொண்டு வர அவர்கள் தயாராகி வருவதாகவும், அது 2010 முதல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு யோசனையாகும் என்றும் அவர் கூறினார்.
இந்த யோசனைகளை தொடர்ந்து கொண்டு வருவதன் மூலம், இலங்கை மனித உரிமைகளை மீறும் ஒரு நாடு என்றும், வடக்கு மக்களின் மனித உரிமைகளை தொடர்ந்து மீறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருவதாக பிரதிபா மகாநாம ஹேவா விளக்கினார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தால் இந்த யோசனையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளாார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யோசனை! 03 நாடுகள் இலங்கையை ஆதரிக்குமா?
Reviewed by Vijithan
on
September 08, 2025
Rating:
.jpg)
No comments:
Post a Comment