சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பி ஓட்டம்
இந்த சிறுவர்கள் கடந்த 27 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற சிறுவர்கள் நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறுவர் மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சிறுவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் கண்டி, கொழும்பு, மாளிகாகந்த மற்றும் கடுவலை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment