அண்மைய செய்திகள்

recent
-

தாஜுதீனை பின்தொடர்ந்த வாகனத்தில் கஜ்ஜா இருந்தமை உறுதி

 பிரபல முன்னாள் ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பயணித்த காரைத் பின் தொடர்ந்து சென்ற ஜீப் ரக வாகனத்தில் கஜ்ஜா என்ற அனுர விதானகமகே பயணித்துள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 13 ஆண்டுகளாக விசாரணை செய்து வருகின்றது. 

இருப்பினும், இந்த கொலையுடன் தொடர்புடைய நபரை இன்னும் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. 

இச் சூழலில், தாஜுதீன் பயணித்த வாகனத்தின் பின்னால் சென்ற ஜீப் ரக வாகத்தில் அனுர விதானகமகே பயணித்தமையை அவரது மனைவி அண்மையில் அடையாளம் காட்டியிருந்தார். 

அதனுடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளைக் காட்டி நடத்தப்பட்ட விசாரணையின் போதே கஜ்ஜா என்ற அனுர விதானகமகே வாக்குமூலமும் வழங்கியிருந்தார். 

அதன்படி, விசாரணை அதிகாரிகளால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய படங்களில் உள்ள நபர் கஜ்ஜா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



தாஜுதீனை பின்தொடர்ந்த வாகனத்தில் கஜ்ஜா இருந்தமை உறுதி Reviewed by Vijithan on October 04, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.