பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார்.
பிரதமர் முதல்நாளன்று தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
“ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரதமரின் இந்த விஜயத்தின் போது, பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரையை ஹரிணி அமரசூரிய ஆற்றவுள்ளார்.

No comments:
Post a Comment