ஏர் நிலம் தொண்டமைப்பு நடாத்தும் "அமுதம் கல்வித் திட்டம்” 05ஆவது ஆண்டு விழா நிகழ்வு-2025
மேற்படி நிகழ்வானது 04.10.2025 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்க மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது..
இந் நிகழ்வானது ஏர் நிலம் தொண்டமைப்பின் நிறுவுநர் சுவிற்சர்லாந்து வாழ் திரு.து.திலக்(கிரி), நிர்வாக இயக்குநர் திரு.தனம் நித்தி ஆகியோரின் ஏற்பாட்டில்
தொண்டமைப்பின் பிரதான ஆலோசகர், மேனாள் முதல்வர் கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…
விருந்தினர்களாக கிளிநொச்சி மக்கள் வங்கி மேலாளர்
திரு செல்லத்துரை சரத்சங்கர்,
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்க நிறுவுநர் திரு.வே.இறைபிள்ளை,
கிளி/திருவையாறு உயர்நிலைப் பள்ளி முதல்வர் திரு.வி.விக்னராசா ஆகியோரும் அமுதம் கல்வித் திட்ட பிள்ளைகள், பெற்றோர்கள் ஏர் நிலம் தொண்டமைப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் செயலாற்றுநர்கள், ஆர்வலர்கள், தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்….
விருந்தினர் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன்
தொடர்ந்து மங்கல விளக்கினை விருந்தினர்கள், செயலாற்றுநர்கள்,
மாணவர்கள் ஏற்றிவைத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை, குறள்பாவினை செல்வன் பி.கரீசன் ஓதினார், வரவேற்பு நடனத்தினை செல்வி ஜே.யஸ்மிதா வழங்கினார், வரவேற்புரையினை சமாதான நீதவானும், கிளிநொச்சி மாவட்டச் செயலாற்றுநருமான திருமதி.வதனா ரதீஸ்வரன் அவர்கள் ஆற்றினார்.
வாழ்த்துரையினை
திரு.வே.இறைபிள்ளை அவர்களும்,
தலைமையுரையினை
கலாநிதி மேனாள் முதல்வர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரன் அவர்களும் ஆற்றினார். தொடர்ந்து கருத்துரைகளை
கிளிநொச்சி மக்கள் வங்கியின் மேலாளர் திரு.செல்லத்துரை சரத்சங்கர், கிளி/திருவையாறு
உயர்நிலைப் பள்ளி முதல்வர் திரு.கி.விக்னராசா ஆகியோர் ஆற்றினார்.
தொடர்ந்து அமுதம் கல்வி திட்டத்தின் பயன்கள் தொடர்பில் சிறப்புரையினை இணைப்பாளரும் கவிஞருமான மன்னார் பெனில் ஆற்றினார். மகிழ்வுரையினை இணையவாயிலாக சுவிற்சர்லாந்திலிருந்து ஏர் நிலம் நிர்வாக இயக்குநர் திரு.தனம் நித்தி அவர்கள் ஆற்றினார்…
தொடர்ந்து அமுதம் கல்வி திட்டப் பயனாளி பிள்ளைகளின் கவிதை, பேச்சு போன்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாற்றுநர் கவிஞர் முறிகண்டி லக்சிதரன் அவர்கள் நிகழ்வினை திறம்படத் தொகுத்து வழங்கியதோடு நன்றியுரையினையும் ஆற்றினார்….
தொடர்ந்து அமுதம் கல்வி திட்டத்தினை தாங்கு தூணாக விளங்கும் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் நிதியாளர்கள் விபரங்கள் வாசிக்கப்பட்டு பயனாளி பிள்ளைகளுக்கான நிதி, வங்கி புத்தகங்கள் கையளிக்கப்பட்டது…
பயனாளிப் பிள்ளைகளுடன் பரஸ்பர உரையாடல் நிகழ்த்தப்பட்டு
மதிய நேர சிறப்புணவுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது.
செய்தியாக்கம்:-
து.திலக்(கிரி),
சுவிற்சர்லாந்து.

No comments:
Post a Comment