அண்மைய செய்திகள்

recent
-

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

 பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 


போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

"தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 21 பெண்களும் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. 

இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். 

எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல." என்றார்.



மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்! Reviewed by Vijithan on October 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.