அண்மைய செய்திகள்

recent
-

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 30 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

 மன்னார் மாவட்டத்தில் 'செமட்ட நிவஹண' மானிய வீட்டு திட்டத்தின் கீழ் மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


உலக குடியிருப்பு தினத்தையொட்டி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (5) குறித்த வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அதனடிப்படையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6)  ஏனைய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.


தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக  வசதியற்ற குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு மில்லியன் நிதியுதவியின் மூலம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பயனாளிகள் வீதம் 30 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.


அதற்கமைவாக மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பயனாளிககளின் மேலதிக நிதி செல வீட்டில் குறித்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் திங்கட்கிழமை(6) காலை மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹிம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.


-குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் அதிகாரி,மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.











உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 30 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு Reviewed by Vijithan on October 06, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.