தலைமன்னார் கட்டுகாரன் குடியிருப்பு குடிநீர் திட்டம் - வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கட்டுகாரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுகாரன் குடியிருப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை (06) காலை மக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் கட்டுகாரன் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் நீண்ட காலமாக குடிநீர் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தின் 543 ஆவது காலாட்படையின் ஒழுங்கமைப்பில் வைத்தியர் ஜினஞ்சலா சானிக்க விஜயகுண சேகர அவர்களின் நிதி உதவியுடன் குறித்த கிராம பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் குடிநீர் பெறும் வகையில் குறித்த குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இராணுவத்தின் 54 காலாட் படையின் கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் சந்திர அபஜகோன் மற்றும் 54 காலாட் படை பிரிவின் பொறுப்பதிகாரி,கட்டுகாரன்குடியிருப்பு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்துள்ளார்.

No comments:
Post a Comment