மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தயார் நிலையில் மட்டு. நகர்
மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மட்டக்களப்பில் உள்ள நான்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், வவுணதீவு தாண்டியடி துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அனைத்து துயிலும் இல்லங்களிலும் தமிழ் மக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
November 26, 2025
Rating:


No comments:
Post a Comment