யாழில் கொல்லப்பட்ட பிரான்ஸ் இளைஞன்; அம்பாறையில் இருவர் கைது
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் கடந்த 19 ஆம் திகதி வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள்
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Reviewed by Vijithan
on
November 25, 2025
Rating:


No comments:
Post a Comment