கடுகண்ணாவ மண்சரிவு ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நான்கு பேர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகள்
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன.
இந்த நிலையில், மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Reviewed by Vijithan
on
November 22, 2025
Rating:


No comments:
Post a Comment